நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டில் சிறந்த போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

பயணிகள் சிறந்த மன நிலையுடன் பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை நன்றாக கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறும், பயணிகள் பயணிப்பதற்கான சுத்தமான ஆசனங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

“மிகவும் சிறிய ஆரம்பத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்த முடியும். பேருந்தை கழுவி சுத்தப்படுத்தி பயணிகள் ஆசனம் பெற்று செல்வதற்கான நடவடிக்கையை நாளைக்கே ஆரம்பியுங்கள்.

மோட்டார் வாகனத்தில் பயணிப்பவர்கள் அதனை நிறுத்தி விட்டு பஸ்களில் உரிய இடத்திற்கு செல்வதற்கு பார்க் என்ட் ட்ரைவ் முறையை உடனடியாக செயற்படுத்த வேண்டும். அதன்மூலம் வீதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு பெற வேண்டும்.

பேருந்து மற்றும் ரயில் இணைப்பு சேவை மற்றும் முற்பண கொடுப்பனவு அட்டை முறையும் அறிமுக்கப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறந்த நிலையில் உள்ள பொது பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலை பயணிக்க அனுமதித்து குறைந்த பணத்தில் அதிக பயணிகள் பயணிப்பதற்கு வசதி ஏற்படுத்தற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.