அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை மராத்தான் வீராங்கனை ஹிருனி விஜேரத்ன அண்மையில் நடைபெற்ற 5000 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை சாதனையை முறியடித்தார்.
டென்னசியில் நடந்த மியூசிக் சிட்டி டிஸ்டன்ஸ் கார்னிவலில் 16 நிமிடம் 17.51 வினாடிகளில் பெண்கள் 5,000 மீட்டர் ஓட்டத்தில் ஹிருனி சாதனை படைத்தார்.
கடந்த ஆண்டு இலங்கை ராணுவ விளையாட்டுப் போட்டியில் நீலானி ரத்நாயக்க அமைத்த சாதனையான 16 நிமிடங்கள் 17.82 வினாடிகள் என்ற சாதனையையே ஹிருனி முறியடித்தார்.
இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய ஹிருனி , “நான் எதிர்காலத்தில் ஒரு பெரிய சவாலை சமாளிக்க வேண்டும்.
அதாவது அடுத்த செப்ரெம்பரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மராத்தான் போட்டிக்கு தகுதி பெறுவது. அங்குள்ள 10,000 மீட்டர் நிகழ்விலும் கவனம் செலுத்துகிறேன். ” எனத் தெரிவித்தார்.