சர்வதேச தரத்துக்கு இணையாக கல்வித் திட்டம்; 2021இல் அறிமுகம்

சர்வதேச தரத்துக்கு இணையாக இலங்கையில் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுஞத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக தரம் ஒன்று தொடக்கம் தரம் 13 வரையான பாடத் திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய கல்வித் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.