9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவையும் நியமிக்க ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.
இதேவேளை குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் ராமநாதனை நியமிக்கவும் ஆளும் கட்சி முடிவு செய்தது.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சித்தரப்பில் யாரும் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சபைத் தலைவராக தினேஷ் குணவர்தனவையும், தலைமை அரசாங்க கொறடாவாகவும் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கும் போதே மஹிந்த யாப்பா அபேவர்தனவை “எங்கள் புதிய சபாநாயகர்” என அமைச்சர் சி.பி.ரத்நாயக்க முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.