சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வெட்டப்பட்ட மாடுகள்!! 224 கிலோ இறைச்சியுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டிய நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தலவாகலை சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இவரிடமிருந்து 244கிலோ இறைச்சி மீட்கப்பட்டது. தலவாகலை பகுதியில் இயங்கும் இறைச்சி கடை ஒன்றுக்கு இறைச்சிகளை வழங்குவதற்காகவே மாடு வெட்டபட்டது எனவும் உயிருடன் ஒரு மாடு மீட்கபட்டுள்ளது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் எதிர்வரும் 23ஆம் திகதி நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தபட உள்ளார் என தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like