சற்று முன்னர் கட்சித் தலைமையகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மணிவண்ணன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், கட்சியை விட்டு விலகிச் செல்லப் போவதில்லையென கட்சித் தலைமைக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில் வி.மணிவண்ணன் குறிப்பிட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்திற்கு சென்ற மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றி விட்டு, கட்சி அலுவலகத்தை கஜேந்திரகுமார் அணி பூட்டியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொறுப்பிலிருந்து மணிவண்ணனை கஜேந்திரகுமார் அணி நீக்கியது தவறு அதற்கு பொய்யான சில காரணம் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறாக இருந்தது என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழல் தொடர்பிலும் தன் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பை மணிவண்ணன் இன்று யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்தார்.

எனினும், தற்போது அங்கு சென்ற மணிவண்ணனையும், ஆதரவாளர்களையும் கஜேந்திரகுமார் அணி அலுவலகத்தை விட்டு வெளியேற்றியுள்ளது.

அத்துடன் அலுவலகத்தையும் பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.