மகளின் திருமண நாளில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை!

தும்மலசூரிய – பிபிலதெனிய பகுதியில் மகளின் திருமண நாளில் விபத்து ஒன்றில் தந்தை உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் அதேபகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது உயிரிழந்த நபர் தனது மகளை அழகு கலை நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், திருமணத்திற்காக தனது மகளை அழைத்து வருவதை மிகுந்த உற்சாகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தும்மலசூரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.