கடன் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நீடிப்பு! மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக வர்த்தகத்தில் நட்டமடைந்தவர்கள் “சௌபாக்கியா” திட்டத்தின்கீழ் வங்கிகளில் 4 வீத மூலதனக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூலதனக்கடன்களுக்கான விண்ணப்பங்களை 2020 செப்டம்பர் 30 வரை வர்த்தகர்கள் வங்கிகளில் சமர்ப்பிக்கமுடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த கடன் திட்டத்தின்கீழ் 36,489 விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ரூ 100,017 மில்லியன் மதிப்புள்ள கடன்களுக்கு மத்திய வங்கி 2020 ஆகஸ்ட் 18ம் திகதிவரை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை தவிர ஆகஸ்ட் 18ம் திகதி வரையிலான பகுதியில் 25,365 பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு 68.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.