பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

ஸ்ரீலங்காவில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வகையில் நியமனம் வழங்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாத தரப்பினர் தற்போது அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது அரசாங்கம் பட்டதாரிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தனது திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தாம் பதவியில் இருந்தபோது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு எதுவுமே செய்ய தவறியவர்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ஆற்றிய உரையில் 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் நியமன விஞ்ஞாபனத்தில் 50 ஆயிரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேறுபாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

நியமனங்களுக்கு தெரிவாகி நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் அது குறித்து மேன்முறையீடு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஷ சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.