மின்வெட்டு இனி இல்லை; புதிய மின்பிறப்பாக்கி இணைப்பு

இன்று வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் மின் பிறப்பாக்கி ஒன்று தேசிய மின் விநியோகத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர், மேலும் இரண்டு மின்பிறப்பாக்கிகள் விரைவில் இணைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாடுமுழுவதும் தடங்களின்றிய மின் விநியோகத்தை இன்றிரவு தொடக்கம் முன்னெடுக்க முடியும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நுரைச்சோழை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.