ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,941 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 2927 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்றையதினம் மொத்தமாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 16 பேர், இந்தியாவில் இருந்து 2 பேர் மற்றும் இந்தோநேசியா, துருக்கி, குவைத்தில் இருந்து வருகை தந்த தலா ஒருவர் என நாடு திரும்பிய 23 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.