மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (29) கட்டிடவேலை உதவியாளராக வேலை செய்யும் போது தவறுதலாக விழுந்து மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் அண்மையில் வெளியாகியுள்ள பட்டதாரி பயிலுனர் பெயர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் விரைவில் தனது கடமையினை பொறுப்பேற்கவிருந்தார்.
இந் நிலையில் தனது வீட்டு கஷ்டநிலமை காரணமாக நாளாந்த கட்டிட வேலை உதவியாளராக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் செய்துகொண்டிருந்தார்.
இதன்போது குறித்த வீட்டின் நீர்த்தாங்கியினை சுத்தம் செய்ய மேலே ஏறிய போது தவறுதலாக கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் கடந்த 19ம் திகதி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக காத்தான்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.