பட்டதாரிகள் நியமனத்தை தாமதப்படுத்த முயற்சி!

அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய போதிலும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதை தாமதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குவதை அரசு தாமதப்படுத்துகிறது என்று சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று அறிவிக்கும் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.