வனிதாவின் சர்ச்சைக்கு பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு! கடும் ஷாக்கான ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் இனி வாய்ஸ் கொடுக்கப் போவதில்லை என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை, நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சையானது.

இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நடிகையும் எம்.பியுமான சுமலதா இடுப்பில் கை வைத்ததாக செய்தி பரவியது.

அதை டேக் செய்த நெட்டிசன் ஒருவர், இதை பற்றி பெண்ணுரிமை போராளிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் டேக் செய்து, ட்விட்டரில் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘நான் எந்த அரசியல் கட்சி/குழு/ஜாதி/ திரைப்படத் துறை, சார்ந்தவள் இல்லை, ஒரு தனிப்பட்ட கலைஞர்.

குடும்பம்தான் எனக்கு எல்லாம். என்னால் முடிந்த உதவிகளை என் நிகழ்ச்சிகள் வழியாகவும் மற்ற வழிகளிலும் செய்துகொண்டே இருப்பேன். சமூக ஊடகங்களில் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். என்னை tag செய்யாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், இப்போ என்னை டேக் செய்பவரெல்லாம் என்னை தாக்கிய போது எங்கே இருந்தீங்க? என் போராட்டங்களை என் குடும்பத்தோடும், என்னை புரிந்துகொண்ட மக்கள் ஆதரவுடனும் நான் பாத்துக்கறேன்.

உங்க சாதி அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. எனக்கு டேக் செய்யாதீங்க. நன்றி என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.