50,000 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தயார் – மீதமுள்ள 10,000 பேருக்கு விரைவில்

“அரச சேவைக்குள் இணைக்கப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. செப்ரெம்பர் 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவர்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் தமது கடமையைப் பொறுப்பேற்க முடியும்” என்று அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வழங்கிய தேர்தல் உறுதிமொழியின் படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பதவிக்கு 2019 டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் பட்டம் முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக, பொது சேவைக்கு ஆள்சேர்ப்பு செய்வதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு 50 ஆயிரம் நியமனக் கடிதங்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரம் பட்டதாரி பயிற்சி நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளின் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தரவுத்தளத்தை அரச சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்” என்றும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கூறினார்