எந்தவொரு அமைச்சரின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் எனக்கும் தெரியாது செயல் திட்டம் எதனையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட செயலாளரும் அனுப்பி வைத்த கடிதத்தினால் சீற்றமுற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அக் கடிதத்தை விரைந்து அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அங்கஜன் இராமநாதனால் 2020-08 18 திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரான கணபதிப்பிள்ளை மகேசனிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமே அமைச்சரை சினம் கொள்ள வைத்து இவ்வாறு மொழி பெயர்ப்புடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு அந்த விடயத்தை அவசரமாக அனுப்பி வைக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக்கடித்தில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் திட்டம் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படும் போது தனது தலைமையின் கீழ் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து இதனை சகல பிரதேச செயலாளருக்கும் அறிவிப்பதோடு திட்டங்களின் விவரங்களையும் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை நடைபெற்றவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா பேசவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.