நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு பொதிக்கான கட்டணம் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
3000 ரூபாய் பெறுமதி உணவினை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 ரூபாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டமை அடுத்து, புதிதாக நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவுகளுக்கான கட்டணம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற நிதி முகாமைத்துவ பணிப்பாளர் உபனந்த நேற்று சபையில் வெளியிட்டார்.
காலை உணவிற்கு 100 ரூபாவும், பகல் உணவிற்கு 200 ரூபாவும், தேனீர் இடைவேளையின் போது 50 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பினர் ஒருவருக்கு 200 ரூபாய்க்கு வழங்கப்படும் உணவு 3000 ரூபாய் பெறுமதியானதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தினால் உறுப்பினர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக அந்த உணவு பெற்றுக் கொண்டோம். இந்த உணவு 3000 பெறுமதியானதா என இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல வினவியுள்ளார்.
இந்த கதையை வெளியே கூற வேண்டாம். 3000 ரூபாய் உணவு 200 ரூபாவுக்கு வழங்கப்படுவதாக கூறினால் எங்களுக்கும் அவமானம் என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவு 3000 ரூபாய் பெறுமதியானதென எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு இந்த உணவு வேண்டாம். எங்களால் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை உட்கொள்ள முடியும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.parli