‘சிறுமியை கொன்றது நாங்கள் தான், எதையும் சந்திக்க தயார்” : ஊடகவியலாளர்களிடம் திமிராக பேசிய கொலையாளி

காஷ்மீர் கத்வா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். சிறுமியின் கொலை உலக நாடுகள் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபரலங்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் சிறுமி மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகள், முன்னாள் அரச அதிகாரி உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றுக்கு சென்று வெளியில் வரும் போது, கைது செய்யப்பட்ட நபர்களில் பொலிஸ் அதிகாரியான தீபக் கஜுரியா,

‘சிறுமியை கொலை செய்தது நாங்கள் தான். எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றோம்” என மிகவும் திமிராக ஊடகவியளாளரிடம் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like