பெண் ஊழியர்களுக்கு வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைங்களங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் கடமை நேரத்தில் கௌரவமான உடைகளை அணிய வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள வாலிபர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச திணைக்களங்களில் கடமையாற்றி வரும் பெண் ஊழியர்கள் கடமை நாட்களில் தமக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர்.

பெண் ஊழியர்களுக்கு வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

இந்த நிலையில், அலுவலகங்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்ள செல்பவர்களுக்கு அலுவலக உத்தியோகத்தர்களை இனங்காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வரும் இந்த நிலையில் அரச அதிகாரிகளும், ஊழியர்களும் கலாச்சார மேம்பாட்டை மதித்து கிழக்கு மாகாணத்தை கௌரவமான மாகாணமாக இனங்காட்ட முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை அனைத்து மாகாணங்களிலும் கடமையாற்றும் உயரதிகாரிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் அணிய வேண்டிய உடைகள் பற்றிய விபரங்களை வழங்கி, பொது மக்கள் மத்தியில் கௌரவமான உடைகளை அணிந்து சேவையாற்றக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like