கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறுக்கு இறம்பொடை தோட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண்ணொருவரை காணவில்லையென பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிமலர் (சஹானா) என்ற குடும்ப பெண்ணே காணாமல் போயுள்ளார்.
கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாகவே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார்.
பல இடங்களிலும் தேடியும் பெண்ணை காணவில்லையென கொத்மலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு பொலிசாரும் பல கோணங்களில் விசாரணை செய்து குறித்த பெண்ணை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.