திருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன்.!! அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்!!

எகிப்து நாட்டில் புறநகர் பகுதி ஒன்றில் பெற்றோர் சம்மதத்துடன் அந்த திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் இருவரும் தேநிலவை கொண்டாடும் வகையில் தங்கள் வாகனத்தில் புறப்பட தயாராக இருந்துள்ளனர். 

அப்போது மணமகளின் தாயார் காரின் அருகாமையில் வந்து, தமது மகளுடன் ஒரு நிமிடம் பேச வேண்டும் எனவும், அவளுக்கு கடைசியாக பிரியாவிடை கூற வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மணமகன், இதுவரை அனைத்து நாளும் அவள் உங்களுடனே தானே இருந்தாள். தற்போது அவளிடம் பிரியாவிடை கூற வேண்டிய அவசியம் இல்லை என சத்தமிட்டு கத்தியுள்ளார்.

இந்த களேபரத்தை கண்டு மணமகளின் மாமனார் ஒருவர் மணமகனை அணுகி சமாதானம் செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சியும் வீணானது. இதனிடையே கோபத்தில் அலறிய மணகன் வாகனத்தில் இருந்து வெளியே குதித்து, தமக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், விவாகரத்து உடனே வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 மணமகனின் இந்த பேச்சை கேட்ட மணமகள் குடும்பத்தினர் அடிதடியில் இறங்கியுள்ளனர்.திருமண மண்டபத்தின் வெளியே குழுமியிருந்த இரு குடும்பத்தாரும் அந்த சண்டையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கும் கொண்டு சேர்ப்பித்துள்ளனர்.

இந்த களேபரத்தின் இடையே மணமகள் தமது தாயாருடன் தனது குடியிருப்புக்கு கிளம்பி சென்றுள்ளார். ஆனால் மணமகன் அவருடன் செல்ல மறுத்துள்ளார். தமக்கு விவாகரத்து வேண்டும் என்றே அவர் அடம்பிடித்துள்ளதாக அரேபிய நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் எகிப்தில் விவாகரத்து எண்ணிக்கையானது நகர் புறங்களில் 60.7 சதவீதமும்,கிராமங்களில் 39.3 சதவீதமும்அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கு விவாகரத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, பொருளாதார சிக்கல்கள், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பொறுப்பின்மை, போதை மருந்து மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மோதல் போக்கு எனக் கூறப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like