விழாக்கள் மற்றும் தனிப்பட்ட வைபங்களுக்கு தன்னை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கேட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மக்களின் நலனுக்காக அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளை அடிமட்ட அளவில் தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அன்றாட உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நேரத்தை செலவிடுவதோடு மட்டுமல்லாமல், விழாக்கள், பரிசு வழங்கல், திருமணங்கள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்ள அவர் விரும்பாததால் உங்களை இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்கு அழைக்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மரியாதை மற்றும் பாராட்டுக்கு புறம்பாக, பலர் அவரை தங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் கலந்து கொள்ள அழைக்கிறார்கள். மக்களிடம் இந்த அர்ப்பணிப்பை அவர் பெரிதும் பாராட்டுகிறார்.
ஆயினும்கூட, உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு வெளியே ஒவ்வொரு மணிநேரத்தையும் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்க ஜனாதிபதி உறுதியாக உள்ளார்- என்றுள்ளது.