லிந்துலையில் 100 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்ற வேன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று மாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

அதில் பயணஞ் செய்த சாரதியும், மற்றொருவரும் கடும் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய உணவுகளை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் லிந்துலையை நோக்கி வரும் பொழுதே குறித்த வேன் அனர்த்தத்தை எதிர்கொண்டது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தூக்க கலக்கம் ஏற்பட்டதனால் வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like