இந்து முறைப்படி தாலி கட்டி இல்லற பந்தத்தில் இணைந்த சிங்கள ஜோடி! குவியும் பாராட்டுக்கள்

சிங்கள ஜோடி ஒன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டமை பலருக்கும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரத்தில் வசிக்கும் எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜானாக்க பூர்ணிமா ஆகியோரே இவ்வாறு இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

இவர்களின் திருமணம் இன்று வவுனியா குருமன்காடு ஶ்ரீவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் பலரும் குறித்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.