தலைவர் பிரபாகரனை மாத்தையாவிடம் ஒப்படைத்த இந்தியப் படை

30.07.1987 அன்று யாழ்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கின் முதல் பணி, விடுதலைப்புலிகளுடன் ஒரு சுமுகமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதாகவே இருந்தது.

அந்த நோக்கத்துடன் அவர் புலிகளின் உள்ளுர் தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மாத்தையாவைச் சந்தித்து அவருடன் இந்தியப்படை உயரதிகாரி ஹரிகிரத் சிங் பேச முற்பட்டபோது, ‘ஜெனரல், நான் உங்களுடன் எதுவும் பேசத் தயாரில்லை…’என்று தெரிவித்துவிட்டார் மாத்தையா.

‘எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை மீண்டும் எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் வரை உங்களுடன் பேச நாங்கள் தயாரில்லை’ என்று உறுதியாகவே தெரிவித்து விட்டார்.

இந்தியப் படையின் இலங்கை வருகையின் போது இடம்பெற்ற ஒரு ‘வரலாற்றுச் சம்பவத்தை’ மீட்டுப்பர்க்கின்றது இந்த ஒளியாவணம்: