வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து!

நிதிசார் குற்றங்களை இலங்கையில் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக நிதி குற்றம் தொடர்பாக ஆபத்து இனங்காணப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

லண்டனில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இணைவாக நிதி சார் ஒழுங்கு விதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உலக நிதி வலயமைப்பின் மூலம் வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like