34 ஆண்டுகளிற்கு முன்னர் செல்வச்சந்நிதி தேருக்கு நேர்ந்த கதி …. நெகிழ்ச்சிப் பதிவு

1983 இனப்படுகொலை நிகழ்ந்து அந்தக்காயம் ஆறுவதற்குள்

வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் 1986 ம் ஆண்டு சித்திரை 20 ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் மாமனாரான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா அரசபடைகள் செல்வச்சந்நிதி வளாகம் நோக்கி முன்னேறியபோது எரிக்கப்பட்டது.

இலங்கையில் முதலாவது மிகப்பெரியதும் உலகின் நான்காவது மிகப்பெரியதுமான செல்வச்சந்நிதி முருகனின் தேர் எரிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 34 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

அந்தவகையில்,

1.1983 இனக்கலவரம்.

2.நூலக எரிப்பு.

3.சந்நிதியான் தேர் எரிப்பு.

இத்தகைய அக்கிரமங்கள் செய்த ஒரு கட்சி இவ்வருட தேர்தலில் இருந்த தடம் தெரியாமல் அழிந்துபோனது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் எனும் நம் மூதாதையர் மொழி இன்று பொய்க்கவில்லை என்பது யாமறிந்த உண்மை.