இரட்டைக் குடியுரிமையுள்ளோர் எம்.பியாகத் தடை; ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை 30ஆகக் குறைப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையத்தடை விதிக்கப்படுவதாக முன்மொழியப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டருந்தது.

எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்டு வருவதற்கு வசதியாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதியளிக்கப்படும் முன்மொழிவு இருக்கும் என எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 இல் இருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.