பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலையைத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

எதிர்வரும் திங்கட்கிழமை (செப். 14) முதல் பாடசாலைகளில் பிற்பகல் உணவு வழங்கல் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கோரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளியை பராமரிக்கும் போது பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இடைவேளையில் அதிகளவான மாணவர்கள் கூடுவதில்லை என்பதை உறுதிப்படுத்த அதிபர்களும் ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, சுகாதார அமைச்சு வழங்கிய பரிந்துரைகளை கடைபிடிக்குமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.

காலையில் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களிடமிருந்து உணவுக்கான முற்பதிவுகளைப் பெறவும், வகுப்பறைகளில் உள்ள மாணவர்களுக்கு முறையான முறையில் உணவுகளை விநியோகிக்கவும் கல்வி அமைச்சு, அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க முடிந்தால்தான் பாடசாலைகளின் சிற்றுண்டிச் சாலைகளை மீண்டும் திறக்க முடியும் என்று கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.