பொதுமக்கள் தினம் புதனுக்கு பதிலாக திங்கள் -மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுமக்களின் பிரச்சினைகளில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கவனம் செலுத்துவதற்கான “பொதுமக்கள் தினம்” புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அத்துடன், திங்கட்கிழமைகளில் அமைச்சர்கள் தமது அலுவலகத்துக்கு சமுகமளித்து பொதுமக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த விடயத்துக்கு ஒப்புதல் வழங்கியது என்று அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

60 ஆண்டுகளுக்குப் பின் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.