கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்தகவலை இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும கடுகதி இரயில்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களிலும் வழமைபோல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.