யாழ் இந்துக்கல்லுாரியில் ஓ.எல் வகுப்பு மாணவர்கள் 5 பேர் பாடசாலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
குறித்த மாணவர்கள் வகுப்பில் குழுவாக மோதி சண்டை பிடித்ததுடன் அதனை தொலைபேசியில் பதிவு செய்து முகநூலில் சினிமா பாட்டுடன் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் ஐவரும் பாடசாலையை விட்டு அதிபரால் நீக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் இந்துக்கல்லுாரிக்கு புதிதாக கடமையேற்றுள்ள ஆளுமையான அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்காக பல இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார்.
இந்நிலையில் அதிபருக்கு துணையாக பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.