சாரதிப் பத்திரம் வழங்குவதில் குருதிப் பரிசோதனை கவனத்தில் கொள்ளப்படாது

குருதிப் பரிசோதனைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில், எந்த காரணத்திற்காகவும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குருதிப் பரிசோதனையில் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் இருப்பது தெரியவந்தாலும், அது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதைத் தடுக்காது என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.