அவுஸ்ரேலியாவில் இலங்கையர் செய்த முகம் சுழிக்க வைத்த செயல்! பொலிசார் அதிரடி நடவடிக்கை

சிறுமிகளை தகாத செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் தகாத ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகநபர் போலி சமூக ஊடக அடையாளங்களைப் பயன்படுத்தி, இங்கிலாந்திலுள்ள இளம் பெண்ணொருவரையும் அமெரிக்காவிலுள்ள இளம் பெண்ணொருவரையும் தொடர்புகொண்டு, அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார் என்பது புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட புகைப்படங்களை, அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பி, பல கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுமாறு கோரி அச்சுறுத்தியதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தனது கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால் அவர்களின் வாழ்க்கையை அழிப்பதாக சந்தேகநபர் எச்சரித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே சந்தேகநபரை கைது செய்துள்ள புலனாய்வாளர்கள், மெல்போர்ன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.