கிணற்றுக்குள் சடலமாக கிடந்த மகன்… கதறிய தந்தை! நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகேயுள்ள முகிலன்விளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான சீனிவாசன் என்பவரது மூன்றாவது மகன் சிவனேஷ்(22).

இவர் மதுதரையில் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த நிலையில், கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், கன்னியாகுமரியில் தனது பெற்றோருடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் தூங்கி எழுந்து பல் துலக்குவதற்கு வெளியே வந்த சிவனேஷ் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் தந்தை அருகில் இருந்த தோப்பிற்கு சென்று தேடி வந்துள்ளார். தோப்பிற்குள் மகனைக் காணாததால், அருகில் இருந்த விவசாய கிணற்றில் அவதானித்துள்ளார்.

அங்கு கிணற்றில் தண்ணீர் வற்றிய நிலையில், சிவனேஷ் சடலமாக காணப்பட்டதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, குறித்த மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like