யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற சம்பவம்… இளைஞன் மீது வாள்வெட்டு..!

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாலி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வாள்வெட்டு கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன், வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.