இலங்கையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் பலி

இலங்கைக்குள் இன்று இரவு வரை கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3262 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் 28 பேர் இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

இவர்கள்- ஐக்கிய அரபு ராச்சியம், பஹ்ரெய்ன், இந்தியா, கட்டார், வியட்நாம், குவைத் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.

இந்தநிலையில் 244 பேர் தற்போது வைத்தியசாலைகளில் கிசிச்சைப் பெற்று வருகின்றனர். 3005 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இன்றும் ஒருவர் உயிரிழந்தார். இதுவரையில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like