நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்த உருவப்படம், வளைவுகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், இரவோடு இரவாக நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் வளைவுகளை அகற்றியுள்ளனர்.

இந்த வளைவுகளை இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக அமைத்து வந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உணவு ஒறுப்பை ஆரம்பித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உணவு ஒறுப்பிலிருந்த பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் – திலீபனின் முதல்நாள் பயணம்