மின்சார சபை கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள் !

கிளிநொச்சி மாவட்டத்தின் சிலப்பகுதிகளுக்கு போலியான மின் இணைப்பு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என இலங்கைமின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது .

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மக்களுக்கு மின்சாரம் பெற்றுத் தரப்படும் என போலியான விண்ணப்ப படிவங்கள் வழங்க்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டமையை தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மக்கள் புதிதாக மின்சார இணைப்பை பெறுவதாயின் இலங்கை மின்சார சபையிடமே விண்ணப்பத்தை பெற்று உரிய முறைப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டுமே தவிர கட்சிகள் தனிநபர்கள் வழங்கும் விண்ணப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலம் அறிவித்துள்ளது.

அதே சமயம் நாடு முழுவதும் இதுவரை காலமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளே மின்சாரம் இணைப்பு வழங்குவதற்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்காக மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மின்சார சபை அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை உரிய முறைப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டும் இதுவே நடைமுறை எனத் தெரிவித்த அவர்கள். வேறு விண்ணப்ப படிவங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. எனவும் தெரிவித்தனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like