கணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகள்: அம்பலப்படுத்திய சிசிடிவி! அவமானத்தில் குடும்பத்தினர்

இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Asama-வுக்கும் அப்துல் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.

இந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகள் மற்றும் 10 வயதில் மகன் உள்ளார். இந்த தம்பதி அபதுலின் பெற்றோர் இருக்கும் Panipath’s Soni காலனியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த Asama, அதிகாலை 4 மணியளவில் மாமானரும், அபதுலின் தந்தையுமான சலீமுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Asama தன்னுடைய 10 மாத மகளுடன் வீட்டை விட்டு வெளியில் வருகிறார். அவருக்காக சலீம் காத்திருக்கும் வீடியோ காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ஆனால், இது எல்லாம் தெரியாமல் குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால், இது குறித்து கடந்த 28-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையிலும், அங்கிருந்த சிசிடிவி கமெராவையும் ஆராய்ந்து பார்த்த போது, உண்மை அறிந்து குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Asama கணவரான அப்துல், மனைவியின் இந்த செயலால், யாரையும் எதிர் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். அவர் தன்னுடைய தந்தைக்கும், மனைவிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று நம்பினார்.

ஏனெனில் இருவரும் அந்தளவிற்கு வீட்டில் இருந்த போது சண்டை போட்ட படியே இருந்துள்ளனர். இதனால் ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்தியுள்ளனர்.

ஆசாமா மற்றும் அவரது தந்தையின் இந்த நடவடிக்கை முழு குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.