நாட்டு நிலமையால் கடும் மன வருத்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய!

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து வருத்தமளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது கண்காணிப்புக்கு அமைய நாட்டில் பொதுவான பிரச்சினையாக யாரும் வேலை செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் பிரிவுகள் இரண்டினதும் செயற்பாடு மிகவும் மெதுவாக இருப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் வழக்கம் போல் ஒரே மட்டத்திலேயே உள்ளமை அதற்கான ஒரு உதாரணமாக உள்ளதென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பணிகளைத் தொடங்கியுள்ள அனைத்து கட்டுமானங்களும் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற மனப்பான்மை மாற்றத்துடன் அபிவிருத்தி புரட்சி ஒன்றை செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து கட்டுமானங்களிலும் அரச மற்றும் தனியார் துறைகளை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த 409 குடும்பங்களுக்காக வீடுகள் நிர்மாணித்து மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.