நோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்!!

நவீன உலகில் ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக ரோபோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தலைநகர் டோக்கியோவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்கு இந்த ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாய் போன்ற உருவத்தில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தலை,மூக்கு மற்றும் வால் பகுதியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் மூலம் மனிதர்களின் நிலையை அறிந்து ரோபோக்கள் உதவி செய்கின்றன.