கனடாவில் உயிரிழந்த யாழ் இளைஞன் – குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு தமிழர்

கனடாவில் விபத்து ஒன்றின் போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மார்க்கம் பகுதியை சேர்ந்த 46 வயதான வெர்னிசோலஸ் ஒளிவநிக்கலஸ் என்பவர் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

ரொரோன்றோவின் Woodbine கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 3ஆம் திகதி படகு ஒன்று பாறைகள் மீது மோதியமையில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் படகினை செலுத்தியவரான வெர்னிசோலஸ் ஒளிவநிக்கலஸிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மரணத்தை ஏற்படுத்தும் குற்றவியல் அலட்சியம், உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் இரண்டு குற்றவியல் அலட்சியங்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவாகியுள்ளன. கைதானவர்

வெர்னிசோலஸ் ஒளிவநிக்கலஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 பேருடன் வேகமாக பயணித்த படகு கட்டுப்பாட்டை இழந்து, Woodbine கடற்கரைக்கு அருகே கரையிலிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் படகை பாறைகளில் மோதினார்.

படகு பாறைகளில் மோதியதன் விளைவாக, 47 வயதான ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

படகை இயக்கியவரும் மீதமிருந்த பயணிகளும் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானார்கள். இவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 3 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர்.

உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 47 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்பது குறிப்பிடத்தக்கது.