நவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது

நவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே உயிரிழந்தார்.

கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles