அதிகாலையில் கண்டியில் திடீரென தாழிறங்கிய பகுதி – புதையுண்டு போன 5 மாடி கட்டடம் – குழந்தை பலி

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் அதிகாலையில் நிலம் தாழிறங்கியமையினால் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டடத்திற்குள் சிக்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

பிந்திய தகவல்களின்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டட இடிபாடுகள் தொடர்பில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.