கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல்!!!

கர்ப்பிணி பெண் ஒருவர் 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

லக்னோ நகரின் புறநகர்ப் பகுதியான மோகன்லால் கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கர்ப்பிணிப் பெண்ணை ஏமாற்றி கடத்திச் சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

இதில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தமையைத் தொடர்ந்து, குறித்த 4 பேரும் தப்பி விட்டதாக தெரியவந்துள்ளது.

அந்தப் பக்கமாக சென்ற உள்ளூர் மக்கள் பெண் மயங்கிக் கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மயக்கம் தெளிந்து, நடந்த கொடூர சம்பவத்தை பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொலிசார் குறித்த நால்வரையும் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like