போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம் – நாளை முதல் அமுல்

பேருந்து முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வான்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாளை (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு நாளை முதல் முன்னுரிமை பேருந்து பாதையில் பயணிக்க முடியாது என்பதால், அவை வெளிப்புற பாதையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்காக தனியான வழித்தடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளும் குறித்த வீதிகளில் அதே வழித்தடங்களில் பயணிக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காவல் துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.