பாடசாலை உப அதிபரால் தாக்கப்பட்ட 3 ஆம் ஆண்டு மாணவன் மருத்துவமனையில்.

இப்பாகமுவ கல்விப் பணிமனையில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் 3ஆம தர மாணவருக்கு அப்பாடசாலையின் உப அதிபரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவரின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று காலை மத விழாக்களில் கலந்துகொண்டிருந்தபோது நண்பனால் தனது மகன் தள்ளிவிடப்பட்டள்ளார்.

இதன்போது கீழே விழுந்த தனது மகனை பாடசாலையின் உப அதிபர் கடுமையாக தாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவர் நேற்றைய தினம் கொகருல்ல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மாணவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles