களத்தில் குதித்தது முப்படை – சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் அதேவேளை போதைப் பொருளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஒவ்வொரு இடங்களிலும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை சுற்றிவளைக்கும் அதேவேளை இவை எவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன? யார் கொண்டு வருகின்றார்கள்? எந்த எந்த இடங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன? அவற்றை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டை சூழவும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தி முப்படையினரும் பொலிசாரும் இணைந்து நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுத்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.