ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவு! ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டிய ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜோன் அமரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜோன் அமரதுங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இது குறித்து தனக்கு தெரிவித்துள்ளார் என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் இடம்பெற்ற பின்னரே தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய தோல்வியை சந்தித்திருந்ததுடன், ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மட்டும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.a

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles